தென்னங்குருத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தென்னை மரத்தின் முக்கிய பகுதிகளான தென்னம்பூ, தென்னை ஓலை, தென்னங்குருத்து, இளநீர் என ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளது.
தென்னங்குருத்து பசி உணர்வை அதிகரிக்க உதவும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள் தென்னங்குரத்தை சாப்பிட்டு பயன் பெறலாம்.
தென்னங்குருத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் புண்களையும் குணப்படுத்தும் திறன் கொண்டவை.
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கற்கள் உருவாவதை தடுக்கவும் தென்னங்குருத்து சிறந்த தீர்வாகும்.
உடல் சூட்டை குறைத்து உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள தென்னங்குருத்து உதவக்கூடும்.
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி மற்றும் தொற்றுகளை போக்க தென்னங்குருத்து உதவியாக இருக்கலாம்.
தென்னங்குருத்து பெண்களுக்கு மிக நல்லது. கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்யும் வேலையைச் செய்கிறது.
தென்னங்குருத்தில் அதிகப்படியான அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மலச்சிக்கல் பிரச்சினையை போக்க உதவுகிறது.
Explore