சத்து மாவில் இவ்வளவு நன்மைகளா?

சத்து மாவு, அல்லது ஹெல்த் மிக்ஸ், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பலவிதமான தானியங்கள், பருப்புகள், மற்றும் பயறு வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
சத்து மாவில் உடலின் நிலைத்தன்மைக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சத்து மாவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
சத்து மாவு நார்ச்சத்து நிறைந்த கலவையாகும். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.
சத்து மாவு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்திருப்பதால், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
வளரும் குழந்தைகளுக்கு, சத்து மாவு ஒரு சிறந்த உணவாகும். இது அவர்களின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது
சத்து மாவு, குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டிருப்பதால், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது
சத்து மாவில் உள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்கள், எலும்புகளை பலப்படுத்த உதவுகின்றன.
Explore