தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது, உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
credit: freepik
மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
credit: freepik
ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட்டால், பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது
credit: freepik
பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. மாலை கண், கிட்ட பார்வை, தூர பார்வை போன்ற பிரச்சினை ஏற்படாமல் பப்பாளி தடுக்க உதவி செய்யும்.
credit: freepik
பூண்டு சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
credit: freepik
வெங்காயம், பூண்டு, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
credit: MetaAI
பச்சைப் பயறு, மோர், பனங்கற்கண்டு, நெல்லிக்காய், வெந்தயக்கீரை, நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.