நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ துவையல்..!

அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்: வாழைப்பூ - 1 ,கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் ,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - 4 ,துருவிய தேங்காய் - கால் கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை: வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.
அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள். மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும். இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.
Explore