சிறிதளவு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
credit: pixabay
பெருஞ்சீரகம் இயற்கையாகவே இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டது. வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடக்கூடியது.
credit: pixabay
பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பசி உணர்வை போக்கி முழுதாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும்.
credit: pixabay
செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும், செரி மானத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவும்.
credit: freepik
வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும்.
credit: freepik
இதில் உள்ள ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் குடலில் உள்ள தசைகளை தளர்த்தவும், பிடிப்புகள் மற்றும் வாயு தொந்தரவை குறைக்கவும் உதவும்.
credit: freepik
சர்க்கரை பாகு கலந்து வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகமும் செரிமானத்திற்கும், வாய் புத்துணர்ச்சிக்கும் உதவும் என்றாலும் அதிலிருக்கும் இனிப்பு கலோரிகளை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.
credit: freepik
மேலும் ஊட்டச்சத்துக்களின் செறிவை நீர்த்து போகச்செய்யும். உடல் பருமன், ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்கள் இனிப்பு பெருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும்.