எந்த நாட்டு மக்கள், இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா?
credit: freepik
இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது. எந்த நாட்டு மக்கள், இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன் படுத்துகிறார்கள் என்பதை பார்ப்போம்.
credit: freepik
1. இந்தியா: இந்தியாதான் உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 413 மில்லியன் (41.3 கோடி) மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள்.
credit: freepik
2. அமெரிக்கா: உலக வல்லரசான அமெரிக்கா, இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இருக்கிறது. அங்கு 172.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள்.
credit: freepik
3. பிரேசில்: இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 141.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள்.
credit: freepik
4. இந்தோனேசியா: இந்தோனேசியாவில் 90.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் பொழுதை போக்குகிறார்கள்.
credit: freepik
5. துருக்கி: 58.3 மில்லியன் பயனர்களுடன் துருக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 47.1 சதவிகிதத்தினர் பெண்கள் மற்றும் 52.9 சதவிகிதத்தினர் ஆண்கள்.
credit: freepik
இந்த டாப்-5 நாடுகளை தொடர்ந்து, ஜப்பான் 6-வது இடத்திலும், மெக்சிகோ 7-வது இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கின்றன.