உணவுக்கு காரமும், சுவையும் சேர்ப்பதில் மிளகாய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. பச்சை மிளகாய் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
இவற்றில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான செயல்முறை எளிதாக நடைபெற உதவும்.
பச்சை மிளகாய் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் கலோரிகள் இல்லை. அதேநேரத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணை புரியும்.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்களுக்கும், சருமத்திற்கும் நன்மை தரும்.
பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் பச்சை மிளகாய் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட் கொண்டது.
பச்சை மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக விளங்குகிறது. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது.
பச்சை மிளகாயில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.