சர்க்கரை நோயாளிகள் ஊறுகாய் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் ஊறுகாய் சாப்பிடலாமா?

Published on
ஊறுகாயில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 57 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது.
இது ரத்த கொதிப்பை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பக்கவாதம், இருதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
ஊறுகாயில் உள்ள அதிகமான அளவு சோடியம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது.
ஊறுகாயில் உள்ள அதிகமான அளவு சோடியம் சில சமயம் வயிறு புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகமான அளவு சோடியம் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற செய்து எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுத்தி எலும்பின் அடர்த்தியை இழக்க செய்து எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்.
அதனால் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் அதிகமான அளவு சோடியம் இதில் இருப்பதால் ஊறுகாயை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஒருமுறை சேர்ந்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com