using all photo metaAI
using all photo metaAI

தெரிய வேண்டிய சமையல் டிப்ஸ்..!

Published on
சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.
சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.
முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.
கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.
இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.
மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.
ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com