சரும பொலிவை அதிகரிக்கும் தேநீர் வகைகள்!

credit: freepik
செம்பருத்தி தேநீர்: செம்பருத்தி பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது. குறிப்பாக கூந்தல் அழகுக்கு இது மூலப்பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது.
credit: freepik
நீரேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் இது தோல் வறட்சி, அரிப்பு பிரச்சினைகளை குறைக்கிறது. இதில் உள்ள கொலாஜன் தோலும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
credit: freepik
டேன்டேலியன் தேநீர்: . இந்த மூலிகை தேநீரில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இது வயதான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது.
credit: freepik
மேலும் நச்சுத் பொருட்களை வெளியேற்றுகிறது. இது சில வகையான செல் சேதத்தை தடுக்க உதவும். மேலும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல் சேதத்தை தவிர்க்கவும் துணை புரியும்.
credit: freepik
ரோஜா தேநீர்: ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் நறுமணமிக்க பன்னீர் அழகுப்பராமரிப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது.
credit: freepik
இது சரும சுருக்கங்களை குறைத்து பொலிவாக வைத்திருக்க செய்யும், இந்த ரோஜா இதழ்களை தேநீராக்கி குடித்தால் சருமம் பளபளப்பதை நன்றாகவே பார்க்கலாம்.
credit: freepik
மல்லிகை பூ தேநீர்: மல்லிகை தேநீரில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை புத்துயிர் பெறவும் நிறமிகளை சமன் செய்யவும் உதவுகிறது. சருமத்தில் மெல்லிய கோடுகளை குறைக்கவும் செய்கிறது.
credit: freepik
இந்த மல்லிகை தேநீரை தினமும் பருகிவருவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் செய்யும்.
Explore