வியர்க்குரு பிரச்சினையா? கவலைய விடுங்க.!!

சிலருக்கு உடம்பெல்லாம் வியர்க்குரு ஏற்பட்டு கடுமையான தொந்தரவு கொடுக்கும். உடலிலுள்ள தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாகத் தோன்றி, சொரிந்தால் எரிச்சலையும், வலியையும், அரிப்பையும் கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கும்.
இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் போன்றவை வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவும்.
கிராமத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பனை நுங்கு மிகமிகச் சிறந்த மருந்து. அதிக அளவில் இதை சாப்பிடலாம்.
வெயில் காலத்தில், வழக்கமாக குடிப்பதைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவேண்டும்.
வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றுமே வியர்க்குருவுக்கு மிகச் சிறந்த கிருமி நாசினி மருந்து. இதை அரைத்து உடலில் பூசி குளிக்க வேண்டும்.
வெறும் சந்தனத்தை தண்ணிரியில் கரைத்து உடலெங்கும் தேய்த்துக் கொள்ளலாம். இது வியர்க்குருவை விரட்டியடிக்கும் தன்மைகொண்டது.
ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு, வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால், எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.
Explore