நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளின் தாயகம் தெரியுமா?

மாங்காய்: மாங்காயின் தாயகம் இந்தியா, வங்காளம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளே.
முட்டைக்கோஸ்: ஐரோப்பா கண்டம்தான் முட்டைக்கோஸின் தாயகம். முட்டைக்கோஸ்களில் 150 வகைகள் உள்ளன
கத்தரிக்காய் : இது 'சொலாளனேசியா' என்ற குடும்பத்தைச் சேர்ந்த செடி வகை. தென்னிந்தியாவும், இலங்கையுமே கத்தரிக்காயின் தாயகம்.
உருளைக்கிழங்கு: 'சொலனம் டியூபரோசம்' எனும் செடியில் இருந்து கிடைக்கும் கிழங்குதான் உருளை. உலகில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலிடத்தை சீனாவும், இரண்டாமிடத்தை இந்தியாவும் வகிக்கின்றன.
கேரட் : 'அப்பியாசெயீ' என்ற குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாயகம் ஆப்கானிஸ்தான். முதன்முதலில் அங்குதான் பயிரிடப்பட்டது.
தக்காளி : தக்காளியின் தாயகம், தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதி (பெரு, ஈக்வடார்) மற்றும் மெக்ஸிகோ (மத்திய அமெரிக்கா)ஆகும்.
மிளகாய் : மிளகாயின் தாயகம் அது மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்கா ஆகும். இது போர்த்துகீசியர்களால் 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பச்சை: பட்டாணியின் தாயகம் மத்திய ஆசியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிழக்கு பகுதிகள் ஆகும்
Explore