credit: freepik
credit: freepik

தண்ணீர் பருக சரியான நேரம் எது தெரியுமா?

Published on
வீட்டிலேயே இருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு வேலையில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருந்தாலோ நிறைய பேர் போதுமான அளவு தண்ணீர் பருகமாட்டார்கள். அப்படி இருப்பது உடல் இயக்க செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
credit: freepik
காலையில் எழுந்ததும் தவறாமல் அரை லிட்டர் அளவாவது தண்ணீர் பருக வேண்டும். அது உடல் உறுப்புகள் சீராக இயங்க வழிவகை செய்யும்.
credit: freepik
வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வரும்போது கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் வைரஸ், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளின் வீரியம் குறைந்துவிடும்.
credit: freepik
சாப்பிடும்போது தண்ணீர் பருகுவது கூடாது. அதற்கு பதிலாக சாப்பிட தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் தண்ணீர் பருகலாம். அது சாப்பிட்டு முடித்ததும் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும்.
credit: freepik
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு தண்ணீர் பருகலாம். அது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது ரத்த ஓட்டம் சீராக இயங்க துணைபுரியும்.
credit: freepik
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீராவது அருந்துவது நல்லது. தண்ணீரை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக பருகக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்த வேண்டும்.
credit: freepik
அதிகமாக தண்ணீர் குடிப்பதாக இருந்தால் அதிக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு தேவை. தண்ணீரை காய்ச்சி அருந்துவதுதான் நல்லது. சீரகம், வெந்தயம் போன்றவற்றை தண்ணீரில் கலந்தும் பருகலாம்.
credit: freepik

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com