குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தித்திப்பான ஜவ்வரிசி கேசரி..!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தித்திப்பான ஜவ்வரிசி கேசரி..!

Published on
ஜவ்வரிசி, சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய், முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப, நெய் - தேவையான அளவு
செய்முறை : ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். குங்குமப்பூவை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் வடிகட்டிய ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறவும்.
ஜவ்வரிசியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் கிளற வேண்டும். ஜவ்வரிசி கண்ணாடி போல் வரும் வரை இவ்வாறு செய்யவும்.
அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் சிறிது நெய், ஊறவைத்த குங்குமப்பூவை சேர்த்து கிளறவும்.
சர்க்கரை நன்றாக கரைந்து திக்கான பதம் வரும் போது வறுத்து வைத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கும் போது சிறிது நெய் சேர்த்து இறக்கவும்
இப்போது சுவையான, வித்தியாசமான ஜவ்வரிசி கேசரி தயார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com