இந்தியாவின் 'டாப் 10' பணக்காரப் பெண்கள் யார் யார் தெரியுமா?

10. பால்குனி நாயர். 'நைக்கா' என்ற அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.24 ஆயிரத்து 650 கோடி.
9. லீனா திவாரி. இவர், யுஎஸ்வி பார்மா என்ற மருந்து நிறுவனத்தின் நிறுவனர். இவரின் சொத்து மதிப்பு 25 ஆயிரத்து 500 கோடி.
8. அனு ஆகா. இவர் தெர்மாக்ஸ்' என்ற நிறுவனத்தின் நிறுவனர். இவரின் சொத்து மதிப்பு, ரூ.26 ஆயிரத்து 350 கோடி.
7. ராதா வேம்பு, ஜோகோ நிறுவனத்தின் இணை நிறுவனர். இவரின் சொத்து மதிப்பு, ரூ.27 ஆயிரத்து 200 கோடி
6. கிரண் மஜும்தார் ஷா, பயோகான்' நிறுவனத்தின் நிறுவனர். இவரின் சொத்து மதிப்பு, ரூ 28 ஆயிரத்து 900 கோடி.
5. ஸ்மிதா கிருஷ்ணா, கோத்ரேஜ் நிறுவனத்தின் நிறுவனர். இவரின் சொத்து மதிப்பு ரூ.29 ஆயிரத்து 750 கோடி.
4. வினோத் ராய் குப்தா, ஹேவல்ஸ் என்ற மின் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனர். இவரின் சொத்து மதிப்பு ரூ.39 ஆயிரத்து 950 கோடி.
3. ரேணுகா ஜக்தியானி, லேண்ட்மார்க் குழும நிறுவனங்களின் நிறுவனர். இவரின் சொத்து மதிப்பு ரூ.47 ஆயிரத்து 600 கோடி.
2. பங்குச்சந்தை ஜாம்பவானான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா இவரின் சொத்து மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி.
1. சாவித்திரி ஜிண்டால். இவர் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் தலைவர். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 91 ஆயிரத்து 550 கோடி.
Explore