பீன்ஸ் பிடிக்குமா? சுவை மட்டுமல்ல, அதிக சத்தும் இதில் நிறைந்துள்ளது!
Photo: Wikipedia
பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள், எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது.
credit: freepik
ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.
credit: freepik
ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும். மிக அதிக அளவிலான வைட்டமின்-ஏ, பீன்ஸில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், மேலும் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.
credit: freepik
ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு ரொம்பவும் அவசியமானது.
credit: freepik
இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகியவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. அதிலுள்ள நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
credit: freepik
குடல் இயக்கங்களை ஆதரிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
credit: freepik
பச்சை பீன்ஸில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன, இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.