தூக்கத்தின் போது திடீரென கீழே விழுவது போல் தோன்றுகிறதா? காரணம் என்ன?

திடீரென பெரிய கட்டடத்தின் மேல் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதை ஹிப்னிக் ஜெர்க் என குறிப்பிடுவர்.
தூக்கத்தில் கனவு வரும் நிலைக்கும், தூங்க தயாராகும் நிலைக்கும் இடையிலானதுதான் இந்த ஹிப்னிக் ஜெர்க் என சொல்லப்படுகிறது.
இறுக்கமாக இருக்கும் தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்காக, பெரிய இடத்திலிருந்து விழுவது போன்ற கனவை மூளை உருவாக்கும். இதனால் உடல் தானாக ஜெர்க் ஆகி பின் சுதாரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆகிறது.
பெரும்பாலும் கால்களிலுள்ள தசைகள்தான் இவ்வகை ஜர்க்கை உணரும். எதனால் இந்த ஜர்க் ஏற்படுகிறது என்பது முழுமையாக தெரியாவிட்டாலும் சில ஆய்வுகள் ‘நாம் பாதுகாப்பான இடத்தில் தூங்குகின்றோமா என்பதை உறுதி செய்ய, ஜர்க் ஏற்படுகிறது’.
மிகவும் சோர்வாக இருப்பதனால் இப்படியான ஜர்க் ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
மன அழுத்தம், பதற்றம் அதிகம் இருப்பவர்களுக்கும் இவ்வகை ஜர்க் ஏற்படக்கூடும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் தூக்க அமைப்பு, குழந்தைகளைவிட பெரியவர்களுக்குத்தான் அடிக்கடி தீவிர ஜர்க் ஏற்படுவதாக கூறுகிறது.
இவற்றை தடுப்பதற்கு இருளான, அமைதியான, மிதமான வெப்பநிலையில் தூங்குவது, எந்த எலக்ட்ரானிக் சாதனங்களையும் அந்த அறையில் வைக்காமல் இருப்பது, படுக்கையில் இருந்தபடி மொபைல் - டிவி பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை பலன்களை கொடுக்கும்.
Explore