உடல் சூட்டைத் தணிக்கும் பானங்கள்!

Photo: MetaAI
இளநீர்: கோடையில் உடல் வறட்சி ஏற்படாமல் தடுத்து, குளிர்ச்சியை தக்கவைக்கும் தன்மை கொண்டது இளநீர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பானமாகவும் இது விளங்குகிறது.
Photo: MetaAI
பால்: பாலுடன் தேன் கலந்து பருகி வருவதும் உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
Photo: MetaAI
கற்றாழை ஜூஸ்: கற்றாழையின் சதைப்பகுதியை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். அது முகத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் குளுமை சேர்க்கும்.
Photo: MetaAI
வைட்டமின் சி: ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி சத்து கொண்ட ஜூஸ் வகைகளை பருகுவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
Photo: MetaAI
மாதுளை: தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் பருகி வரலாம். அதனுடன் இரண்டு துளிகள் பாதாம் எண்ணெய்யும் கலந்து கொள்ளலாம். இது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
Photo: MetaAI
மோர்: இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளக்கூடியது. மோரில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. குறிப்பாக புரோபயாட்டிகள் அதிகம் காணப்படுகின்றன.
Photo: MetaAI
வெந்தயம்: காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று, தண்ணீர் பருக வேண்டும். கோடையில் இந்த பழக்கத்தை தவறாமல் பின்பற்றி வந்தால் உடல் வெப்பம் தணிந்து விடும்.
Photo: MetaAI
Explore