சிறுநீரகத்தை கடுமையாக சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்!
credit: freepik
போதிய அளவு தண்ணீர் பருகாதது: தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகாதது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.
credit: freepik
மாத்திரைகள் அடிக்கடி எடுத்துக்கொள்வது: சிலர் தலைவலி உள்பட உடலில் ஏற்படும் லேசான வலிகளுக்கு கூட மாத்திரைகள் உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அடிக்கடி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
credit: freepik
மது, புகைப்பழக்கத்தை பின்பற்றுவது: மது, புகைப்பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இது கல்லீரலை மட்டுமல்ல, சிறுநீரகத்தையும் சேதப்படுத்தும்.
credit: freepik
சரிவிகித உணவு சாப்பிடுவது: வைட்டமின் டி, வைட்டமின் பி6 உள்ளிட்ட சில வைட்டமின்களின் குறைபாடு சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும். கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் சால்மன் மீன் ஆகியவற்றில் வைட்டமின் பி6 நிறைந்திருக்கும்.
credit: freepik
போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது: தினமும் போதுமான அளவு உடல் உழைப்போ, உடல் இயக்க செயல்பாடுகளோ இல்லாவிட்டால் அதுவும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை பாதிக்கும்.
credit: freepik
உப்பு அதிகம் சேர்ப்பது: உப்பில் உள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். சிறுநீரகங்களையும் நேரடியாக பாதிக்கும். எனவே உணவில் உப்பை அதிகம் சேர்க்காமல், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
credit: freepik
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு (சோடியம்) மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் அவை ரத்த அழுத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக சிறுநீரகங்களால் திரவக் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகலாம்.