முட்டை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. புரதங்களின் சிறந்த மூலமாக இருக்கிறது.
முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது. ஆனால் முட்டையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பக்க விளைவுகள் உண்டாகும் என கூறப்படுகிறது.
புரதத்தின் தேவைக்காக அதிகப்படியாக முட்டையை எடுத்துக் கொள்ளும்போது, மற்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படக்கூடும்
முட்டையின் மஞ்சள் கருவை ஒருநாளைக்கு ஒன்றுக்கு மேல் எடுத்துக் கொள்ளும்போது, இதய ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
freepik
முட்டையில் சோடியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். எனவே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
freepik
அதிகமாக முட்டை எடுக்கும்போது அதன் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, எடையை அதிகரிக்கச் செய்யலாம்.
freepik
முட்டையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், அழற்சியை ஏற்படுத்தலாம்.