உங்களுக்காக..இந்த வார சமையல் டிப்ஸ்!

தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது காய்ந்ததும் பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.
வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.
மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.
கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும்.
இரண்டு ஐஸ் கட்டிகள் மற்றும் கல் உப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பிளேடு கூர்மையாக மாறும்.
பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.
இட்லிக்கு மாவு அரைக்கும்போது சிறிது பழைய சாதம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
Explore