கருத்தரிப்பு முதல் ஆண்மை குறைபாட்டை போக்கும் செவ்வாழை ஜூஸ்!

கருத்தரிப்பு முதல் ஆண்மை குறைபாட்டை போக்கும் செவ்வாழை ஜூஸ்!

Published on
வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை ஜூஸ் குடித்து வர பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை ஜூஸ் குடித்து வர மாலைக்கண்நோய் குணமாகும்.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு டப் செவ்வாழைப்பழம் ஜூஸ் குடிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை ஜூஸ் குடிப்பதால் நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு கப் செவ்வாழை ஜூஸ் அரைஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com