ஒரு சிகரெட்...வாழ்நாளில் 19 நிமிடம் இழப்பு! அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும் போது வாழ்வில் 19.5 நிமிடம் குறைவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண்களின் வாழ்வில் 17 நிமிடம் குறைவதாகவும், பெண்களின் வாழ்வில் 22 நிமிடம் குறைவதாகவும் அந்த ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும் போதும் ஒருவர் வாழ்வில் 11 நிமிடம் குறைவதாக பழைய ஆய்வுகள் தெரிவித்து இருந்தன.
தற்போது லண்டன் பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள புதிய ஆய்வில் ஒருவர் 20 சிகரெட்கள் கொண்ட முழு பாக்கெட்டை பிடித்தால் அவர் வாழ்வில் முழுதாக 7 மணி நேரம் குறைகிறது.
ஒருவர் ஒரு நாளைக்கு 10 முறை சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் ஒரு வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒரு முழு நாளை சேமிக்கிறார். அப்படி பார்க்கும்போது ஒரு ஆண்டில் 50 நாளை முழுதாக சேமித்தவர் ஆவார்.
ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும் போது அவரின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது. மூச்சுத் திணறல் குறைகிறது. நுரையீரல் பாதுகாப்பாக மாறுகிறது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தாலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் உடலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
புகைபிடிக்கும் போது நுரையீரலின் செயல்பாடு 60 சதவீதமாக இருந்தால் புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது நுரையீரலின் தரம் 70 சதவீதமாக உயரும்.
Explore