ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் பழங்கள்!

credit: freepik
பேரிக்காய்: எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவு இருந்தால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும். பேரிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
credit: freepik
ஆரஞ்சு: இதில் பைட்டோஸ்டெரால்ஸ் என்ற பொருள் உள்ளது. இது குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஒரு வகை கொழுப்பு பொருளாகும். ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.
credit: freepik
ஆப்ரிகாட்ஸ்: ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிப்பதற்கு ஆப்ரிகாட்ஸ் பழங்கள் உதவும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
credit: freepik
ஸ்ட்ராபெர்ரி: இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்கக்கூடியவை.
credit: freepik
மாம்பழம்: மாம்பழங்களை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
credit: freepik
ஆப்பிள்: பாலிபினால்கள், நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால்கள் ஆகியவை இதில் உள்ளன. இவை அனைத்தும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
credit: freepik
மீன், வெண்ணெய், நட்ஸ் வகைகள், ஆலிவ் பழங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கிய உணவு பொருட்களை மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
credit: freepik
Explore