இந்தியாவில் பார்வையிட வேண்டிய 'குளுகுளு' மலைவாழிடங்கள்!

Photo: wikipedia
சிம்லா: இந்த பகுதி கோடையில் குளுகுளு தேசமாக வும், குளிர் காலத்தில் உறைபனி தேசமாகவும் சிம்லா மாறிவிடும். இங்கு எந்த பருவத்திலும் செல்லலாம்.
Photo: wikipedia
லே: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ளது லே. இங்கு லடாக், லடாஜி மன்னர்களின் ஒன்பது அடுக்கு அரண்மனை மற்றும் புத்த கோவிலும் பார்வையிடா வேண்டிய இடங்கள்.
Photo: wikipedia
டார்ஜிலிங்: மேற்கு வங்காள மாநிலத்தில் டார்ஜிலிங் உள்ளது. இங்கு 2,134 மீட்டர் உயரத்தில் புத்த மடாலயங்களை தரிசிக்கலாம். இங்கிருந்து கஞ்சன்ஜங்கா மற்றும் எவரெஸ்ட் சிகரங்களை பார்க்கலாம்.
Photo: wikipedia
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். கண்களை கவரும் வகையில் கார்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் இங்கு அதிகம்.
Photo: wikipedia
குடகு: கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு இந்தியாவின் ஸ்காட்லாந்து எனவும், தென்னிந்தியாவின் காஷ்மீர் எனவும் அழைக்கப்படுகிறது. குடகு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு அழகான மலை பிரதேசம்.
Photo: wikipedia
ஊட்டி: பார்ப்பதற்கும், உணர்வதற்கும், அனுபவிக்கவும் ஏதுவான பச்சை கம்பளியில் படர்ந்து கிடக்கும் ஈரமலைத் தொடர்களின் சங்கிலிதான் ஊட்டி. இங்குள்ள தாவரவியல் பூங்கா அரிய தாவரங்களை கொண்டது.
Photo: wikipedia
கொடைக்கானல்: 1845-ல் பிரிட்டிஷ்காரரால் நிறுவப்பட்ட ஊர். மலைகளின் இளவரசி என்று குறிப்பிடப்படும் கொடைக்கானலின் இயற்கை எழில் கொஞ்சும் தன்மை பயணிகளை வியப்பில் ஆழ்த்தாமல் இருப்பதில்லை.
Photo: wikipedia
Explore