தொடர்ந்து இயர்போன்ஸ் உபயோகித்தால் ஏற்படும் தீமைகள்!

அனைவரின் காதுகளிலும் நாள் முழுவதும் ஒட்டிக் கொண்டிருக்கும் பொருளாக மாறியுள்ளது இயர்போன்ஸ்.
பொழுதுபோக்கிற்கு நன்றாக இருந்தாலும், இது நம் காதுகளுக்கு தீமை விளைவிக்கின்றன.
அதிக சத்தத்தில் நீண்ட நேரம் இயர்போன்ஸ் பயன்படுத்தினால் செவிப்பறை நரம்புகள் பாதிப்படைந்து, நிரந்தரச் செவிக்குறைபாடு ஏற்படலாம்.
இரவில் இயர்போன்ஸ் பயன்படுத்தினால் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
இயர்போன்ஸை சுத்தமாக பராமரிக்காவிட்டால் காதினுள் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிக சத்தத்துடன் தொடர்ந்து இயர்போன்ஸில் பாடல் கேட்டால், அதில் இருந்து வரக்கூடிய மின்காந்த அலைகள் தலைவலியை உண்டாக்கலாம்.
இது கவனச் சிதறலையும் ஏற்படுத்துகிறது.
அதிக சத்தத்துடன் பாடல் கேட்கும் போது இதயத்துடிப்பு அதிகமாகும். தொடர்ச்சியாக உபயோகிக்கும் போது இதயப் பாதிப்பு ஏற்படக்கூடும்.
Explore