ஒரு மணி நேரத்திற்கு "60" நிமிடங்கள் ஏன்?

all photo using freepik
ரூபாய்க்கு 100 பைசா, மீட்டருக்கு 100 சென்டிமீட்டர்னு எல்லாம் 100-ல இருக்கும்போது, டைம் (Time) மட்டும் ஏன் (60 Seconds / 60 Minutes) ? இதற்கு காரணம் என்ன? வாங்க பார்க்கலாம்.
நாம் இப்போது பயன்படுத்துகிறது "தசம முறை" (Decimal System - Base 10) அதாவது பத்தை அடியாகக் கொண்ட ஒரு எண் முறை. தற்காலப் பண்பாடுகளில் பரவலான பயன்பாட்டில் உள்ள எண் முறை ஆகும்.
5000 வருடத்திற்கு முன் வாழ்ந்த சுமேரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் " " (Sexagesimal - Base 60) தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் கண்டுபிடித்த 'Time Method ' தான் இது. அதைத்தான் நாம் இப்பொழுது வரைக்கும் மாற்றாமல் பின்பற்றி வருகிறோம்.
ஏன் அவர்கள் 60-ஐ தேர்ந்தெடுத்தார்கள்? எண் 10-ஐ எடுத்துக்கொண்டால், அதை 2 மற்றும் 5-ஆல் மட்டும்தான் முழுசா வகுக்க முடியும். ஆனா, 60 ஒரு மேஜிக் நம்பர்! இதை 1, 2, 3,4,5.. 6, 10, 12, 15, 20, 30 என 12 நம்பர்களால் மீதியில்லாமல் வகுக்க முடியும்!
அதனால் தான் அரை மணி, கால் மணி, முக்கால் மணி போன்ற "Time Divisions" ஈசியாக Calculate பண்ண முடிந்தது.
லத்தீன் மொழியில், ஒரு மணி நேரத்தை முதலில் பிரித்ததால் அதற்கு பெயர் "முதல் சிறிய பகுதி" (Pars Minuta Prima). அதுதான் சுருங்கி "Minute" ஆச்சு.
பின்னர் அந்த நிமிடத்தை மீண்டும் இரண்டாவதாக பிரித்ததால் அதுக்கு பெயர் "இரண்டாம் சிறிய பகுதி" (Pars Minuta Secunda). அதுதான் "Second" ஆச்சு!
டைம் மட்டும் இல்லை, வட்டத்தின் கோணம் 360 டிகிரியாக (6 x 60) இருப்பதற்கும் இதே பாபிலோனியர்கள் தான் காரணம்!
Explore