தேவையான பொருட்கள்: பச்சரிசி -½கிலோ, கருப்பட்டி - ½ கிலோ, ஏலக்காய் - 4 , தேங்காய் -1, உப்பு - சிறிதளவு, முந்திரி - 50 கிராம்
credit: freepik
செய்முறை: பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை போட்டு சூடுபடுத்தவும்.
credit: freepik
கடாயில் சிறிது நெய் (அல்லது எண்ணெய்) விட்டு, முந்திரிப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் தனியாக எடுத்து வைக்கவும்.
credit: freepik
கருப்பட்டி தண்ணீரில் கரைந்து வந்தவுடன் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
credit: freepik
வடிகட்டிய கரைசலில், அரைத்த பச்சரிசி மாவு, ஏலக்காய், சிறிதளவு உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கிளறவும்.
credit: freepik
பிறகு, கிளறிய மாவை தேவையான வடி வத்தில் பிடித்துக்கொண்டு தேங்காய் துருவலில் புரட்டி, இட்லிப் பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.
credit: freepik
ஆவி வந்தவுடன் இறக்கிவிட்டு, கேக்கின் மேலே நெய்யில் வறுத்த முந்திரியை வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.
credit: freepik
தேவைப்பட்டால் கேக் அடுக்குகளை சமன் செய்து, க்ரீம் தடவி, பிறகு சாக்லேட், பழங்கள், நறுக்கப்பட்ட நட்ஸ், மற்றும் தேங்காய் தூள் போன்றவையும் அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம்.