தினமும் ஊறவைத்து பச்சைப்பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பச்சைப்பயிரில் அதிக புரதம் இருப்பதால் தசை வளர்ச்சிக்கும், சேதமடைந்த தசையை சரி செய்யவும் பெரிதும் உதவுகிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலை தடுக்கிறது.
பச்சைப்பயிரில் கலோரிகள் குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
பச்சைப்பயிரில் வைட்டமின் சி, ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதில் போலேட் சத்து உள்ளதால் நரம்பு மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
தினமும் பச்சைப்பயறு உட்கொண்டால், சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.