இரவு நேர வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவு முறை!

credit: freepik
இரவு நேரம் பணியாற்றுபவர்கள், உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்கவேண்டும். அதில் சில முக்கியமான, உணவு பழக்க மாற்றங்கள் இதோ..
credit: freepik
இரவில் வேலைக்கு செல்வதற்கு முன்பாக எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது இரைப்பைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
credit: freepik
இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகமாக இருக்கும். பசியை போக்குவதற்கு சமோசா, பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
credit: freepik
சிலர் டீ, காபி வகைகளை குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து பருகுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதற்கு பதிலாக தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகள் பருகலாம்.
credit: freepik
பழங்கள், காய்கறிகள், கோதுமை பிரெட்டுகள், உலர் திராட்சை, தானிய வகை சாலட்டுகள், அவித்த முட்டை, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
credit: freepik
இரவில் பசி எடுக்கக்கூடாது என்பதற்காக இரவு உணவை தாமதமாக உட்கொள்வது தவறு. இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
credit: freepik
இரவில் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அரிசி சாதம், பருப்பு குழம்பு, தீயில் வேகவைக்கப்படும் கோழி இறைச்சி உள்ளிட்ட புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
credit: freepik
இரவில் விழித்திருக்கும்போது உடலில் வறட்சி தன்மை தோன்றும். அதை போக்க ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவது நல்லது.
credit: freepik
Explore