இயற்கையான உணவுகள் மூலம் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
credit: freepik
உடல் தசைகளின் வளர்ச்சிக்கு புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
credit: freepik
பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் எடையை அதிகரிக்க சிறந்ததாக கருதப்படுகிறது. இவற்றில் அதிக ளவு கால்சியம் மற்றும் புரதம் உள்ளதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
credit: freepik
முந்திரி, பாதாம், திராட்சை, பேரீச்சம்பழம் மற்றும் பிற உலர் பழங்கள் எடை அதிகரிப்பதற்கு சிறந்ததாக கருதப் படுகிறது.
credit: freepik
ஆளி விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளை உட்கொள்வதும் உடலை பலப்படுத்துவதோடு ஏராளமான ஆற்றலை அளிக்கும்.
credit: freepik
வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இந்த பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
credit: freepik
வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்கலாம். இதன் மூலம் ஒரு சில வாரங்களிலேயே உங்கள் உடல் ஆரோக்கியம் பெறத் தொடங்கும்.
credit: freepik
பழங்கள் மட்டுமின்றி காய்கறிகளை உட்கொள்வதன் மூலமும் உடல் எடையை வேகமாக அதிகரிக்க செய்யலாம்
credit: freepik
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் பலவீனமும் நீங்கும்.