ஆரோக்கியம் நிறைந்த பீனட் பட்டர்... வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!
metaAI
பீனட் பட்டர் சாப்பிடுவது எடையை பராமரிக்க உதவுகிறது அல்லது எடை குறைக்க உதவுகிறது என்று பல ஆய்வுகளில் கூறப்படுகின்றன.
metaAI
பீனட் பட்டர் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
metaAI
தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை - 2 கப், கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, தேன் - 2 டீஸ்பூன் ஆகியவை
metaAI
செய்முறை : வறுத்த வேர்க்கடலையாக இருந்தால் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலை இருந்தாலும் அதை உடைத்து கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.
metaAI
பின் அதன் தோலை நீக்கிவிட்டு வைத்துக்கொள்ளுங்கள். வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
metaAI
வேர்க்கடலை கொஞ்சம் மசிந்ததும் அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.
metaAI
அடுத்து அதில் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள். அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.
metaAI
குறிப்பு :இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.