தேவையான பொருட்கள்: நண்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், தேங்காய் பால், இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு ஆகியவை.
செய்முறை: நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
metaAI
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
metaAI
அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.
metaAI
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
metaAI
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
metaAI
இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.