வெறும் சாதத்திற்கு..பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி?

ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்றாக பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் வீட்டில் செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பூண்டு - 1 கப், எலுமிச்சை சாறு - 1/2 கப், சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன், மல்லி - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 1/4 கப் ஆகியவை.
செய்முறை : பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும்.
சீரகம், வெந்தயம், மல்லியை தனித்தனியாக கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.
பூண்டு வதங்கம் போதே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
பின் சற்று கெட்டியானதும், இறக்கி அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.
இந்த பூண்டு ஊறுகாய் வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்
Explore