இலந்தை பழம்..விலை மலிவு..பலன் அதிகம்.!

ஆப்பிள், திராட்சையை விட இலந்தை பழம் அதிக சத்துக்களை கொண்டது. அதிக ஊட்டச்சத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.
இலந்தை பழத்தில் ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது.
இதை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது.
இலந்தை பழம் எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடும். மேலும் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இதை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கமும் வரும்.
பயணம் செல்லும்போது சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் வரும். இதை தவிர்க்க இலந்தை பழம் சாப்பிடலாம்.
உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தருகிறது. மேலும் பசியின்மையை போக்கி பசியை தூண்ட உதவுகிறது.
Explore