முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.
புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.
முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது
நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.