சர்க்கரை நோயாளிகள் ஷூ அணிவது சரியா? தோல் செருப்புகள் அணிவது நல்லதா?
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சரியான காலணிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் காலில் ஏற்படக்கூடிய 85 சதவிகித பிரச்சனைகளை தடுக்கலாம்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்பு பாதிப்பு ஏற்படுவதால் கால்களில் உணர்ச்சி சற்று குறைவாக இருக்கும்.
மூடு காலணிகள் அல்லது ஷூக்களை உபயோகிக்கும் பொழுது கால்களின் மேல் பகுதிகளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதால் செருப்புகளை விட ஷூக்களே சிறந்ததாகும்.
எடை குறைவாகவும், கேன்வாஸ் அல்லது தோலினால் செய்யப்பட்ட ஷூக்களைப் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை கொண்டு செய்யப்படும் செருப்புகளை பயன்படுத்தக் கூடாது.
ஷூக்களின் உள்ளே உள்ள இன்சோல் (Insolo) அதிர்ச்சி உறிஞ்சக் கூடியதாகவும் அதிகம் மென்மையான குஷன்களை கொண்டுள்ளதாகவும் இருந்தால் நடப்பதற்கு மிருதுவாகவும், வசதியாகவும் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக மாலை நேரங்களில் கால்களில் சற்று வீக்கம் ஏற்படும். ஆகையால் இந்த நேரத்தில் ஷூக்கள் அல்லது செருப்புகள் அணிவதே சிறந்தது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் முதலில் காலில் தான் பாதிப்பு ஏற்படுவதால் அவர்கள் ஷூக்கள் அல்லது காலணிகளை வாங்கும் பொழுது மிகவும் கவனமாக தங்களுக்கு பொருந்தக்கூடிய ஷூக்கள் அல்லது காலணிகளை வாங்கி உபயோகிக்க வேண்டும்.