இந்தியாவில் பார்வையிட வேண்டிய குடைவரை கோவில்கள்!

Photo: wikipedia
அமர்நாத் குகை கோவில்; இது காஷ்மீரில் சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு பனியில் இயற்கையாக உருவாகும், சிவலிங்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
Photo: wikipedia
அஜந்தா குகைகள்; மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள இந்த குகைகள், புத்த சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்டுள்ளன. இந்த அற்புதமான குகை தொகுப்பை காண ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
Photo: wikipedia
பதாமி குகை கோவில்: கர்நாடகாவின் வடக்கு பகுதியில் இந்த பதாமி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவில் 6-ம் நூற்றாண்டில் சாளுக்கிய ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Photo: wikipedia
வராக குகை கோவில்: இந்தக் கோவில் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில் வராகர் தன் கொம்புகளில் பூமியை தூக்கும் காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
Photo: wikipedia
மஸ்ரூர் குகை கோவில்: மஸ்ரூர் குகை கோவில் இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. வட இந்தியாவில் அமையப்பெற்ற இந்த கோவில் 'இமயமலை பிரமிடு' என்றும், 'இமாச்சலத்தின் எல்லோரா என்றும் அழைக்கப்படுகிறது.
Photo: wikipedia
கான்கேரி குகை: மராட்டிய மாநிலம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவினுள், பல குகைகள் மற்றும் பாறை சிற்பங்களை உள்ளடக்கியதாக இந்த கான்கேரி குகை அமைந்துள்ளது.
Photo: wikipedia
உதயகிரி மற்றும் கந்தகிரி குகைகள்: ஒடிசா மாநிலத்தில் இயற்கை மற்றும் செயற்கை குகைகளின் கலவையாக இந்த உதயகிரி மற்றும் கந்தகிரி குகைகள் அமைந்துள்ளன. இவை வரலாற்று, தொல்லியல், சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
Photo: wikipedia
Explore