மாம்பழம் சீசன்..தினமும் சாப்பிடுங்க நன்மைகள் ஏராளம்..!

மாம்பழம் சீசன்..தினமும் சாப்பிடுங்க நன்மைகள் ஏராளம்..!

metaAI
மாம்பழம் சீசன்..தினமும் சாப்பிடுங்க நன்மைகள் ஏராளம்..!
மாம்பழ சீசன் தொடங்கி விதவிதமான மாம்பழங்கள் சந்தைக்கு வந்துள்ளன. முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை ருசிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். மாம்பழங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவை
metaAI
மாம்பழம் சீசன்..தினமும் சாப்பிடுங்க நன்மைகள் ஏராளம்..!
இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6, ஏ, தாமிரம், போலேட், வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது.
metaAI
மாம்பழம் சீசன்..தினமும் சாப்பிடுங்க நன்மைகள் ஏராளம்..!
மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கொலாஜனை உருவாக்கவும், மந்தமான சருமத்தை பொலிவூட்டவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
metaAI
மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடைபெற உதவும். வயிறு உப்புசமாகவோ, மந்தமாகவோ இருப்பதாக உணர்ந்தால் மாம்பழங்கள் சாப்பிடலாம்.
metaAI
மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
metaAI
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, லுட்டீன், ஜியாசாந்தைன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை கண் வறட்சி, சோர்வு மற்றும் வயது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
metaAI
மாம்பழத்தில் இருக்கும் போலேட், வைட்டமின்கள் ஏ, சி போன்றவை உச்சந்தலை மற்றும் முடிக்கு வலிமை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களாகும்.
metaAI
மாம்பழங்களில் உள்ளடங்கி இருக்கும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உடலுக்கு தேவையான இயற்கையான சக்தியை கொடுக்கும். அதனால் உற்சாகத்துடன் அன்றைய நாளை இயங்க வைக்கும்.
metaAI
Explore