பிக்பாஸ் சீசன் 8 கோப்பையை வென்று அசத்திய முத்துக்குமரன்!
@insta
முதன் முதலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது.
@insta
24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
@insta
வாரம் ஒரு போட்டியாளர் வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், இறுதி வாரத்தில் முத்துக்குமரன், சவுந்தர்யா, பவித்ரா, விஷால், ரயான் ஆகிய ஐவர் தகுதி பெற்றனர்.
@insta
இறுதி போட்டியில் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகிய 3 போட்டியாளர்கள் இருந்தனர்.
@insta
முடிவில் யார் வெற்றியாளர் என்ற அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி, முத்துக்குமரின் கையை தூக்க முதல் இடத்தைப் பிடித்து வெற்றிக்கோப்பையை தட்டித்தூக்கினார்.
@insta
மேடை பேச்சாளரான முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தனமாக பேசி வந்தார். இந்நிலையில் அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
@insta
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துகுமாரனுக்கு கோப்பையுடன் ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
@insta
வெற்றிக்கோப்பையை தட்டித்தூக்கிய முத்துக்குமரனுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.