ஆரோக்கியம் நிறைந்த ஆலிவ் பழங்கள்..!

மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகளை உள்ளடக்கியது. இருப்பினும் கருப்பு மற்றும் பச்சை நிற ஆலிவ்கள் தான் மிகவும் சிறந்தது.
ஆலிவ்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை தடுத்து நிறுத்துகின்றன.
ஆலிவ்களில் இருக்கும் ஒலிக் அமிலம் (மோனோசாச்சுரேட்டர் கொழுப்பு அமிலம்) வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
ஆலிவ்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஹைட்ராக்சிடைரோசோல் எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது.
இவை புரோபயாடிக் ஆற்றலை கொண்டுள்ளன. இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது.
ஆலிவ் புளிப்பு தன்மை கொண்டது. இது குடலுக்கு நன்மை செய்யும் லாக்டோபாகிலஸ் பாக்டீரியாவை உள்ளடக்கி உள்ளது.
இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் அபாயத்தை குறைக்கும்.
ஆலிவ்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் உதவுகின்றன.
Explore