பெண்களுக்கு பெரிதும் உதவும் வேர்க்கடலை.!

பெண்களுக்கு பெரிதும் தேவைப்படும் போலிக் ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச் சத்து, வைட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் போன்றவை வேர்க்கடலையில் அதிகம் நிறைந்துள்ளன.
பாதாம், பிஸ்தா போன்ற விலை உயர்வான நட்ஸை விட, எளிதாகக் கிடைக்கும் வேர்க்கடலை குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன், மார்பகக் கட்டி உருவாவதையும் தடுக்கப்படுகிறது.
நிலக்கடலை பித்தப்பை கல்லைக் கரைக்கிறது. தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட, பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கலாம்.
இதில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான கால்சியத்தை தந்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய் வருவதையும் தடுக்கிறது.
நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டி சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, மன அழுத்தத்தையும் போக்குகிறது.
மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் 3 நியாசின் இதில் அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது.
Explore