all photo using freepik
all photo using freepik

சிம்பிளான... நாட்டுக்கோழி கிரேவி..!

Published on
விடுமுறை தினமான (ஞாயிற்று கிழமை) நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். இன்று நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம்.
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 200 கிராம், பெரிய வெங்காயம் - 1/4 கப், தக்காளி - 1 ,மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மல்லித் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, தண்ணீர் - 3/4 கப், உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு... தக்காளி - 1 , பெரிய வெங்காயம் - 1 ,இஞ்சி - 1/2 இன்ச், பூண்டு - 4 பற்கள், சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு... எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன், பட்டை - 1/4 இன்ச், ஏலக்காய் - 2 ,சோம்பு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, வரமிளகாய் - 1
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2-3 முறை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.
பிறகு அதில் நாட்டுக்கோழியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான நாட்டுக்கோழி கிரேவி ரெடி!!!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com