மீசை மற்றும் தாடி முடி வளர்ச்சிக்கான எளிய மருத்துவ குறிப்பு!
மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
credit: freepik
மீசை, தாடி முடிகளின் வளர்ச்சிக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் தான் காரணம். டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்கும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.
credit: freepik
டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்கும் உணவுகளான, நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள்,சூரை மீன்,மத்திச்சாளை மீன்களை சாப்பிட வேண்டும்.
credit: freepik
காய்கறிகளில் புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், சர்க்கரை வள்ளி கிழங்கு, பனங்கிழங்கு, பீட்ரூட், கேரட் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
credit: freepik
பழங்களில் செவ்வாழைப்பழம், பேரீச்சம் பழம், அவகோடா, திராட்சை பழம், பெர்ரி வகைகள், பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், மாதுளம்பழம் அகியவற்றை சாப்பிட வேண்டும்.
credit: freepik
முடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க, சிவப்புக் கொண்டைக் கடலை, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டாணி, எள், பாசிப்பயறு ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
credit: freepik
கரிசலாங்கண்ணிக் கீரை, கருவேப்பிலை, முருங்கைக்கீரை, அறுகீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளில் ஒன்றினையும் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
credit: freepik
உடலின் வெப்பம்தீர வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் அளவிற்கு தண்ணீர் அருந்த வேண்டும்.