சமையலுக்கு சுவையை அதிகரிக்க சில டிப்ஸ்!

credit: freepik
தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
credit: freepik
மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.
credit: freepik
தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.
credit: freepik
இட்லி மாவுடன் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் கலந்து இட்லி தட்டில் வேக வைத்தால் சத்தான வெஜிடபுள் இட்லி தயார்.
Photo: MetaAI
பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
Photo: MetaAI
இட்லி தோசைக்கு சட்னி அரைக்கும் போது ஊறவைத்து முளை கட்டிய பச்சைப்பயறு சேர்த்து அரைத்தால் சுவையுடன் சத்தும் கிடைக்கும்.
Photo: MetaAI
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணா மல் போய்விடும்.
Photo: MetaAI
Explore