இருமலை போக்கும் எளிய வழிகள்.!!

தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக பலரும் இருமல், சளியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லாம், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதாக இருமலைப் போக்கலாம்.
தேன்-இஞ்சி :இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கும் போது, இருமல் மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஆவி பிடிப்பது: குளிர்ச்சியான காலத்தில் நல்ல சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் சேர்த்து, அந்நீரை 10 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூலிகை தேநீர் : நல்ல குளிர்ச்சியான காலத்தில் துளசி, பட்டை, மஞ்சள் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதிவிட்டு குடிக்கும்போது, சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள்-பால்: மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து தினமும் இரவு தூங்கும் முன் குடித்துவந்தால், சளி, தொண்டைக் கரகரப்பு, இருமல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இருமலுக்கான கசாயம்: இந்த கசாயத்தை சளி, இருமல் பிடித்திருக்கும்போது செய்து குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த கசாயம் செய்வதற்கு 2 துண்டு இஞ்சி, 1 கையளவு துளசி, 5 மிளகு, 5 கிராம்பு, 2 துண்டு பட்டை, 5 புதினா இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.
Explore