துவர்ப்புச் சுவை: அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தி, ரத்தப் போக்கு, வயிற்றுப் போக்கினை சரி செய்கிறது. அதிகமானால் இளமையில் முதுமை தோற்றம் ஏற்படும். வாய் உலர்ந்து போவதுடன் சரளமாக பேசுவதை பாதிக்கும்.
credit: freepik
இனிப்புச் சுவை: மனதிற்கும், உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரும் சுவை இது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதிகமானால் உடல் தளர்வு, சோர்வு, தூக்கம், இருமல், உடல் எடை கூடுதல் போன்ற சிக்கல்கள் தோன்றலாம்.
credit: freepik
புளிப்புச் சுவை: பசியுணர்வைத் தூண்டி, உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கிறது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் நல்லது. அதிகமானால் பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்த அழுத்தம், அரிப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தி உடலை தளரச் செய்யும்.
credit: freepik
காரம்: உடல் இளைக்கவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றவும், இரத்தச் சுத்திகரிக்கவும் செய்கிறது. தோல் நோய்களுக்கு நல்ல பலன் தருகிறது. அதிக காரம், உடல் எரிச்சல், உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும்.
credit: freepik
கசப்புச் சுவை: அதிக நன்மை தரும் சுவை இது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. தாகத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எரிச்சல், அரிப்புகளில் நிவாரணம் தருகிறது. அதிகமானால் உடலின் நீர்ச்சத்து குறைந்து, மேனி வறண்டு கடினமாகும்.
credit: freepik
உவர்ப்புச் சுவை: இது, அளவோடு இருக்கும் பட்சத்தில் உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. மற்ற சுவைகளை சமன் செய்து செரிமானத்தில் பங்கு வகிக்கிறது. இச்சுவை அதிகமானால் உடல் சூடு காரணமாக சிறு கட்டி, பரு தோன்றும்.
credit: freepik
அறுசுவைகளையும் தமிழ் புத்தாண்டு நாளில் மட்டுமல்லாமல் வருடத்தின் அனைத்து நாட்களிலும் அளவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.