தொண்டை வலி, தொண்டை கரகரப்பா? இதோ எளிய தீர்வுகள்!

தொண்டை வலி, தொண்டை கரகரப்பா? இதோ எளிய தீர்வுகள்!

Published on
பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.
சின்ன வெங்காயம் 5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும்.
முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும்.
வெந்நீரில் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும்.
தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.
ஆடாதோடை இலை-2, மிளகு -5: இதை பனை வெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது தேனுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com