வண்டிய எடுடா நுங்கு கடைக்கு...நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது.
நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினையை போக்குகிறது.
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கி உற்சாகமாக இருக்க தூண்டும்.
ரத்தசோகை பிரச்சினை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.
குடல் புண்ணை குணப்படுத்தி ஆரோக்கியமான குடலுக்கு நுங்கு சிறந்த தேர்வாகும்.
கோடையில் வெயிலில் கொப்பளம், சூடு கட்டிகள் போன்றவற்றை வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.
நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.