சுவை மட்டுமல்ல.. ஆரோக்கியத்திற்கும் சிறந்தது புளி..!
அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. புளிப்புச் சுவையை மிகச்சரியான அளவில் கொடுக்கும் பொருள் தான் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிற புளி.
புளி சுவை மட்டுமில்லாமல் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மருத்துவரின் அறிவுரைப்படி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
ஜீரணக் பிரச்சினைகளை சரிசெய்யும் தன்மை வாய்ந்தது.
உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
புளி சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
புளி கெட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
Explore